பக்கம்:ஊரார்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


43 "இதுக்கெதுக்கு அங்கெல்லாம் போlங்க? இவ்வளவு தானே விஷயம்? எவ்வளவு தொகை வேணும்? சொல் லுங்க! என்ருர். 'மூவாயிரம் இருந்தால் கேட்டோட கோயிலைக் கட்டி முடிச்சுடலாம்." 'இந்தாங்க, இப்பவே எடுத்துட்டுப்போங்க. நல்ல சாகியத்துக்குப் பணம் கொடுக்கக் கொடுத்து வச்சிருக் கனுமே.” மனைவியை அழைத்தார். ஆப்பிள் கொண்டுவரச் சொன்னர். வெற்றிலை பாக்குத் தட்டில் பணத்தையும் ஆப்பிளேயும் வைத்துச் சாமியாரிடம் கொடுத்து விட்டுக் காவில் வீழ்ந்து வணங்கிஞர். 'இன்னும் தேவைப்பட்டா லும் லெட்டர் போடுங்க. அனுப்பி வைக்கிறேன் என்ருர். "பணம் கொடுத்தது போதாது. கும்பாபிஷேகத்துக்கு வந்து நடத்தி வைக்கணும். சின்னப்பா தேவரைக் கூப்பிட லாமான்னு பாக்கறேன்.: "கூப்பிடுங்க, அவர் முருகன் கோயில்ஞ வருவாரு, எதுக்கும் ஜாரிச்சுப் பாருங்க சாமியார் வந்த காரியம் எளிதில் முடிந்து விட்டது. சிந்தாதிரிப்பேட்டை நினைவு வந்தது. நடந்தார். சாமிநாயக்கன் சந்திலுள்ள சைக்கிள் ஷாப்புைக் கண்டு பிடித்துவிட்டார். அங்கே கமலாவின் புருசன் பீடி குடித்துக் கொண்டு உட்கார்ந்திருத்தான். சாமியாரைக் கண்டதும் சட் டென்று பீடியை, தான் உட்கார்ந்திருந்த ஸ்டுலின் கீழ் அழுத்தி விட்டு மரியாதையோடு எழுந்து நின்ருன். “கபாலி! நல்லாதுக்கியா?* o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/42&oldid=758726" இருந்து மீள்விக்கப்பட்டது