பக்கம்:ஊரார்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


67 "இதுக்கு பேர் தியாகமில்லே சாமி. இளி ச்சவாக தனம். கள்ளச்சாராயம் காச்சனங்க. பாத்துகிட்டு சும்மா இருந்தீங்க. பிக்பாக்கெட் அடிச்சாங்க, தெரிஞ்கம் தெரி, யாத மாதிரி இருந்தீங்க. இந்த ஊரில் நடக்கிற அக்கிரமம்; அயோக்கியத்தனம், திருட்டுத்தனம், அடாவடித்தனம், அத்தனையும் பார்த்துக்கிட்டு, சகிச்சுக்கிட்டு இருந்திங்க. இப்ப கொள்ளைக்காரங்க ஊரைக் கொளுத்திடுவோம்னு பயமுறுத்தின. அதுக்கு உங்களை பலியாகச் சொல்ருங்க? ஏன்? ஏன்? ஏன்னு கேட்கிறேன்... "ராத்திரி நீயே இதையெல்லாம் எடுத்துப் பேசி யிருக்கலாமே? "நான் ஏன் பேசனும்? என்னை யார் கேட்டாங்க? அதனலே கடைசி வரைக்கும் வேடிக்கைப் பார்க்கலாம்னு தான் சும்மா இருந்தேன். இது ஊரா இது? மனுசங்களா இவங்க? நன்றி கெட்டவங்க. சுயநலக்காரங்க. கொளுத்த வேண்டிய ஊர்தான் இது. சுடுகாடர்க்க வேண்டியது தான...' s "விசயத்தைப் போலீசிலே சொல்றதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” 'எனக்கு சரியாப்படலே சாமி! அதனுல் சிக்கல் ஏற் படும்னுதான் தோணுது. கொள்ளைக்காரங்க வாரா வதிக்குப்பக்கத்திலே லாரியைக் கொண்டு வந்து நிறுத்து வாங்க. அதுக்கு முன்னடியே வந்து வேவு பாப்பாங்க, போலீசுக்கும் அவங்களுக்கும் கைகலப்பு ஏற்படலாம். உயிர்ச்சேதம் ஆகலாம். அவங்களைப் பிடிக்கவே முடியாது. இதே மாதிரி வடக்கே ஒரு ஊரிலே நடந்திருக்கு. பயங்கர கேஸ்.: 'அதேைல...?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/67&oldid=758753" இருந்து மீள்விக்கப்பட்டது