பக்கம்:ஊரார்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*4 மறு நாள் காலே யாரும் எதிர்பாராத அந்தச் செய்தி வந்தது. கொள்ளேக் கூட்டத்தைப் பிடித்து விட்டதாகப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த செய்தியைப் படித்த போது சாமியாருக்கு வியப்புத் தாங்கவில்லை. கூடலூர் போன பழனிதான் கொள்ளைக் கூட்டத் தார் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டு பிடித்ததாக அந்தச் செய்தி சொல்லிற்று. சாமியார் சந்தோஷ வெறியில் "ஹாஹாஹா!' என்று சிரித்தார் . "என்ன சாமி?' என்று கேட்டுக் கொண்டே வந்தான் குமாரு, அவனுக்கு உடம்பு சரியாகிவிட்டது. "இதப்பாருடா கொள்ளைக் கூட்டம் பிடிபட்டுப் போச்சாம்டா பிடிச்சவன் யார் தெரியுமா? நம்ம பள்னி! முருகன்தான் பள்னி ரூபத்திலே வந்து புடிச்சிருக்கான். நான் தப்பிச்சுட்டேண்டா, தப்பிச்சுட்டேன்!’ எக்காள சிரிப்புச் சிரித்தார் சாமியார். - குமாரு பல்லேக் கடித்தான். தன் நிஜார்ப் பையிலி ருந்த விளையாட்டுத் துப்பாக்கியை எடுத்தான். ஊராரைப் பார்த்து டமால் டமால் என்று சுட்டான். ஊரார் அவ்வளவு பேரும் செத்துக் கீழே வீழ்வதைப் போல் கற்பனை செய்து பார்த்துக் கொண்டான். "உங்களுக்கு இதுதான் சரியான தண்டனை' என்று தனக்குத்தானே சொல்லி மகிழ்ந்தான். வானத்தில் ஒரு விமானம் பறந்து கொண்டிருந்தது. "ஒரு தரம் நாம் ரெண்டு பேரும் சிங்கப்பூர் போய் வருவோ மாடா குமாரு?" என்று கேட்டார் சாமியார். - "அங்கே நிஜத் துப்பாக்கி கிடைக்குமா?-குமாரு கேட்டான், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/74&oldid=758761" இருந்து மீள்விக்கப்பட்டது