பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 ஊருக்குள் ஒரு புரட்சி அடைக்கலசாமி, அதிர்ந்து போனார். அவருக்கு, கோபம் வரவில்லை. தனக்கு ஏன் கோபம் வரவில்லை என்றும் அவர் ஆச்சரியப்பட்டார். ஒரு வேளை. தனக்கு ரோஷம் இல்லாமல் போய் விட்டதோ என்று கூடப் பயப்பட்டார். எவரையும், ஒத்தைக்கு ஒத்தையாய்” சமாளிக்க முடியும் என்று இதுவரை தன் வீரத்தில் அசைக்க முடியாத அபிமானம் வைத்திருந்த அந்தக் கிழவர் வாயடைத்து. கையடைத்து, காலடைத்து நின்றார். மகள்மேல், அக்காள் மகன் வைத்திருக்கும் பாசத்தின் தரிசனத்தில், அடிமனதில் ஏற்பட்ட பெருமிதம் அவர் வெளிமனதில் ஏற்பட்ட கோபதாபத்தை செல்லுபடியாக்காமல் செய்த ரசாயன மாற்றம். அவருக்கே தெரியாது. இதற்குள், வெளியே இருந்து மாசானம், கோபால், மாணிக்கம், இன்னும் இரண்டு மூன்று இளைஞர்கள் ஒடி வந்து, ஆண்டியப்பனைப் பிடித்துக் கொண்டார்கள். கிராம முன்சீப், அடைக்கலசாமியை ஒப்புக்குப் பிடித்துக் கொண்டார். ஆண்டியப்பன், தங்கம்மாவைப் பார்த்து, ஆணையிட்டான்: "தங்கம். வீட்டுக்குப் போ... என் வீட்டுக்குப் போ... என் மாமனும் ஒன் அய்யாவும் செத்து ஒரு மணி நேரமாவுது... இனிமேல் நீ. நீ... என் வீட்டுக்கே போவலாம். உ.ம்... போம்மா... இது நிற்கக்கூடாத இடம்..." அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவள் போல் தங்கம்மா, முக்காடு போட்டுக் கொண்டு நகரப் போனாள். பிறகு, தன் முக்காட்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு, சேலையை இறுக்கிப் பிடித்துக் கட்டிக் கொண்டு, கம்பீரமாக வெளியேறினாள். "ஏளா.. அவன் வீட்டுக்குப் போயி தொலைச்சிராத" என்று கிழவர் சொல்லி விட்டதாக நினைத்தார். ஆனால், வார்த்தைகள், வாயைவிட்டு வெளியேறவில்லை என்பது அவருக்கே தெரியாது. முன்சீப்பிற்கு, இப்போது தன் உத்தியோகத்தின் நினைப்பு வந்தது. மாசானத்தைப் பார்த்ததும், அந்த எண்ணம் அதிகமாக வந்தது. அதட்டினார். - "என்ன மாசானம்... காலிப் பயலுவள கூட்டியாந்து... என் வீட்ல கலாட்டா பண்ண வந்தியா? இதே மாதுரி... நானும் உன் வீட்ல கலாட்டா பண்ண எவ்வளவு நேரமாவும். இல்ல போலீஸ் ரிப்போர்ட் பண்ணத்தான் நேரம் ஆவுமா... பதில் சொல்லுப்பா..." மாசானம், பதில் பேசினார். பயந்து கொண்டே பதில் பேசினார். "அண்ணாச்சி. தப்பா நினைச்சிட்டிய... சும்மா வழில வந்தேன். இந்தப் பையங்க... ஒங்கள பாக்கப் போறதாச் சொன்னானுவ... ஆண்டியப்பன் மாட்ட. இவரு பிடிச்சிக்கிட்டு போயிட்டத சொல்லி... ஒங்க கிட்ட ஒரு ரிப்போர்ட் வாங்கிக் கிட்டு... பெரிய அதிகாரிகள பாக்கப் போறதாச் சொன்னானுவ... சரி சின்னப் பயலுவ... பெரிய மனுஷங்கிட்ட ஒண்ணுகிடக்க ஒண்ண பேசிடப் பிடாதேன்னு நானும் கூட