54
எக்கோவின் காதல் ✽
கவியரசர் முடியரசன்
"துரை! பக்கத்து வீட்டுப் பெண்களோடு என் மனைவியும் அங்குச் சென்றிருக்கிறாள். அதனாலேதான் நானும் போகிறேன்” என்றான் வேலன்.
“உன் மனைவியைத்தான் ஏன் அனுப்புகிறாய்? உன் வீட்டைக்கூட இந்தச் சிறுவிடயத்தில் திருத்தமுடியவில்லை என்றால் நாட்டை எப்படி நீ திருத்தப்போகிறாய்?” என்று தாக்கிப் பேசினேன்.
“நண்பா! நீ மற்ற திருவிழாக்களைப் போல இதையும் எண்ணிவிட்டாயா? வள்ளலார் மற்ற நாயனார் ஆழ்வார்களைப் போல அல்லர். சிறந்த சீர்திருத்தக்காரர். சமூக ஊழல்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று ஓயாது உழைத்தவர். இதோ ஒன்று உதாரணத்துக்குப் பாரேன்.
“கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போகவேண்டும்" என்று எந்த அடியாராவது சொல்லியிருக்கிறாரா? இவர் உறுதியுடன் இத்தகைய உயர்ந்த கருத்துகளைச் சொன்ன காரணத்தாலேதான், சுயநலக் கூட்டம் இவரை எப்படியோ சரிக்கட்டி விட்டுச் 'சோதி'யில் கலந்து விட்டார் என்று விளம்பரம் செய்துவிட்டது. இத்தகைய பெரியாரின் விழாவிற்குச் செல்வதைக்கூடவா நீ வெறுக்கிறாய்?” என்று என்னை மடக்கினான்.
“அது சீர்திருத்தக்காரர் விழாவானாலும் சரி - சீனிவாசப் பெருமாள் விழாவானாலும் சரி காலம், பொருள் வீணாகிறதே என்றுதான் சொல்லுகிறேன். மேலும் அங்கு என்ன நடக்கிறது பார்த்தாயா? சீர்திருத்த உபதேசமா நடக்கிறது. அடிகள் கூறிய அறிவுரை அங்கு வந்துள்ள பக்தர்களுக்குப் பரிகாசமாக அலட்சியமாகப்படுகிறது. அங்குள்ள படத்திற்கு.