பக்கம்:எக்கோவின் காதல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

61

உள்ளம் வேகமாக ஓடும் தையல் இயந்திரத்தின் ஊசி போல வேலை செய்தது. வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டேன்.

“இந்தாருங்கள்” என்று சொல்லிக் கொண்டே விசிறியும் காப்பியும் மேசை மீது வைத்தாள். எனக்குக் குழப்பம் அதிகமாயிற்று.... இவள் காப்பிதரக் காரணம் என்ன? வேலனும் மரகதமும் எங்கே தான் போயிருப்பார்கள்? என்று என்னென்னவோ எண்ணினேன்.

அவள் கதவோரத்தில் கதவைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கி நின்றாள்.

பார்த்தேன் ........பார்த்தாள். சில வினாடிகள் மவுனம்.

'புனிதம்' என்று என் இதயம் பேசியது. என் உதடுகள் என் உள்ளத்தை அவளுக்குத் திறந்து காட்டின.

அவள் முகத்தாமரை மலர்ந்தது. இதழ்கள் அசைந்தன. என் கண் வண்டு பறந்தோடிப் பாய்ந்தது. வண்டைத் தொடர்ந்து சென்றேன். நான்கு கண்களும் எவ்வளவு பேச்சுகள் பேசின. அப்பப்பா! நெடுநேரம் கழிந்தது. பின்னர் வாய்கள் பேசத் தொடங்கின. பேச்சின் முடிவிலே தான் இது, தோழன் வேலனுடைய வேலை என்று தெரிந்து கொண்டேன். எங்களைச் சந்திக்கச் செய்ய வேண்டுமென்றே அவன் இந்தச் சூழ்ச்சி செய்துள்ளான்.

அங்கே இருவரும் காதல் தெய்வத்தின் மீது ஆணையிட்டு உறுதி செய்து கொண்டோம். அதன் பின் எங்கள் நெஞ்சங்கள் சந்தித்தன. அந்தச் சந்திப்பில் வேலனும் மரகதமும் எங்கள் தெய்வங்களாகக் காட்சியளித்தனர். சுருங்கச் சொன்னால்