பக்கம்:எக்கோவின் காதல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

75

“முறை! என்ன முறை! அவன் எனக்குத்தானே மகன். அவளுக்கும் அவனுக்கும் என்ன உறவு வந்தது? ஒரு கயிற்றை நான் கழுத்தில் கட்டியதற்காக அவள் தாயாக முடியுமா?”

"இல்லையில்லை! இது சரி என்று ஒப்புக் கொள்ளவே மாட்டேன். அவள் குற்றவாளிதான் அவளை இப்பொழுதே.....”

“வேண்டாம் ! உன்னைத்தான் தூற்றும் உலகம். அவளைத் தூற்றாது . இயற்கை எண்ணம் - உணர்ச்சி இவற்றைக் கட்டுப்படுத்த முடியுமா? அதை அடக்க உன்னிடம் தான் ஆற்றல் இருக்கிறதா? வயதான உன்னிடமே இல்லாதபோது வாலிப உள்ளத்திலே எப்படி அதை எதிப்பார்க்க முடியும்? ஆகவே நீ எண்ணுவது போல் செய்துவிடாதே! அவளை மணந்து கொண்டதே பெருங்குற்றம். மேலும் கொலைக் குற்றத்திற்கு ஆளாகாதே!”

இப்படியாக நொந்து நொந்து அல்லற்பட்டுக் கொண்டிருந்தது அவருள்ளம்.

“வெந்நீர் காய்ந்து கொதிக்கிறதே; என்ன செய்கிறீர்கள்; குளிக்க எழுந்து வாருங்கள்” என்று சொல்லிக் கொண்டே மாடியில் ஏறி வந்துகொண்டிருந்தாள் மங்களம்.

ஒரு வகையில் மனத்தை - முகத்தைச் சரிப்படுத்திக் கொண்டு எழுந்தார்.

அன்று முதல் அவர் பைத்தியம் பிடித்தவர் போலவே காணப்பட்டார். அவருக்கு முகத்தில் தாடி வளர்ந்து கொண்டு வந்தது போலவே வேரூன்றி முளைத்தெழுந்த அந்த