பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

நிலவு வெளிச்சத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பேன். சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே பதுங்கிப் பதுங்கி நடப்பேன். “தண்ணீர் குடிக்கப் போகும்போது, மிக மிக ஜாக்கிரதையாகப் போகவேண்டும்” என்று என் அம்மா சிறுவயதில் எனக்குச் சொல்லியிருக்கிறாள். அங்குதான் சில சமயம், வேட்டைக்காரர்கள் எங்களை எதிர்பார்த்துக் கொண்டு துப்பாக்கியுடன் காத்திருப்பார்களாம்.

தண்ணீர் குடிக்க நான் தனியாகப் போவதும் உண்டு. என் தோழர்கள் சிலரோடு சேர்ந்து போவதும் உண்டு. அப்போது எதிர்க் கரையில் எங்களைப் போலவே ஒரு சிறு கூட்டம் தண்ணீர் குடிக்க வரும். நாங்கள் அவர்களைப் பார்த்துக் கர்ஜிப்போம். அவர்கள் எங்களைப் பார்த்துக் கர்ஜிப்பார்கள்.

அந்தக் காட்சியை நீங்கள் பார்த்தால், நாங்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் முறைக்கிறோம்