உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எச்சரிக்கை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கொரு சிறிய புற்று அதிலுள்ள ஈசல் யாவும் இங்கேயே இதுகாறும்நாம் இருந்தென்ன பலனைக் கண்டோம் எங்கேனும் சற்று நேரம் இன்பமா யுலவிப் பின்னர். தங்கிட வரலா மென்றே தரணிமேல் கிளம்பா நிற்கும் உலகினில் நடப்ப தொன்றும் உணராத ஈசல் கூட்டம் பலதையும் காண எண்ணிப் பறக்கையில் பட்டாம் பூச்சி சில சில காட்சி தம்மைச் செவ்வையாய் விளக்கிக் காட்டும் கல கல வெனந கைத்துக் காக்கைகள் பறக்கும் குந்தும் பறந்திடும் பட்டாம் பூச்சி பார்க்குமுன் காக்கை கள் தான் பறந்திடும் ஈசல் தமமைப் பழம் போன்று கௌவிக் கொண்டு பறந்திடும் விழுங்கி விட்டுப் பறப்பம்பாய் முகட்டிற் குந்தும் பறந்திடும் பின்னு மொன்றைப் பற்றிடும் விழுங்கும் குந்தும் அச்சிறு சீவ ராசி அவலமா யழியக் கண்ட பச்சிளம் பாலன் நெஞ்சம் பதரிற்று; பரிவால் வாய்வீட் டச்சோஆ ஆஹா வென்றே அதட்டியே ஆர்ப்பரித்தான் கொச்சையாம் காக்கைக் கும்பல் குவலயத் தொழிக வென்றே!

25

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/25&oldid=1730696" இலிருந்து மீள்விக்கப்பட்டது