18. காந்திமகான் வீர ரென்பவர் யாவரி லும்டெரும் வீரம் படைத்தவன்யார்? பாரில் பாமரர் படுந்துயர் நீங்கப் பரிந்தவர்க் கேஉழைத்தோன்! இன்பந் துய்த்தவர் யாவரி லும்பே ரின்பம் துய்த்தவன்யார்? அன்பு கூர்ந்தரு ளாவல் சுரந்திட அறவழி யில்நடந்தோன்! தியாகி யென்பவர் யாவரிலும்பெருந் தியாகியாய் வாழ்ந்தவன்யார்? நியாய நிலைநின்று நியாயம் நிலைநாட்ட நாட்களை அர்ப்பணித்தோன்! பக்தி யுடையவர் யாவரி லும்பெரும் பக்தி யுடையவன் யார்? சக்தி முழுவதும் சகத்தின் நன்மைக்குச் சலியாது தானளித்தோன்! அறிவு படைத்தவர் யாவரி லும்பே ரறிவு படைத்தவன்யார்? துறவு நிலையீலதன சிந்தையை வைத்துத் தூய்மை பெருக்கிடுவோன்! பாக்கியம் செய்த யாவரி லும் பெரும் பாக்கியம் செய்தவன் யார்? ஆக்கினை கட்குத் தலைவணங் காதுநல் லறிவின் படி நடந்தோன்! இத்தனைக் குணம் மொத்தம் தானேயாகி இந்நிலத் திருந்தவன்யார்? சத்தி யத்தைத்தன் சித்தத் திருத்திய சாந்தநம் காந்திமகான்
20
26