பக்கம்:எச்சில் இரவு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

திராட்சைப் பழங்களையும், மாதுளம் பழங்களையும் சீன நாட்டுக்குக் கொண்டு வந்தானும். நீங்கள் பொன் விளைந்த களத்துாருக்குப் போய் வந்தீர்களே, அங்கே எனக்கென்ன வாங்கி வந்தீர்கள்,” என்று கேட்டாள்.

“நான் பொன் விளையும் களத்தூருக்குப் போயிருந்தால், உனக்குப் பொன் வளையல் வாங்கி வந்திருப்பேன். எப்போதோ ஒருகாலத்தில் பொன்விளைந்த களத்துாருக் கல்லவா நான் போயிருந்தேன். இப்போதங்கே பொன்னும் விளையவில்லை. உனக்குப் பொன் வளையலும் வாங்கி வரவில்லை! வெற்றிலே வாங்கிக் கொண்டு வரலாமா என்று நினைத்தேன். அதை நான் வாங்கிக் கொண்டு வந்தால் இந்த இலை ‘வெற்று இலை’தானே என்று நீ சொல்லி விடுவாய் என்பதனுல், அதை நான் வாங்க விரும்பவில்லை. என்றான்”

“எனக்கு வேறு, என்னதான் வாங்கி வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

“உள்ளே சொருவுறது வாங்கி வந்திருக்கிறேன்” என்றான் அவன்.

“உள்ளே சொருவுறதா? அது என்ன” என்று கேட்டாள்.

“அது தான் கொண்டை ஊசி” என்று கூறி, அதனை அவளிடம் கொடுத்தான். அவள் அதனே வாங்கித் தன் கொண்டையில் செருகிக் கொண்டிருக் கையில், அவன் அவளைப் பார்த்து,

“பாரசீக மக்கள் மாதுளம் பூவையும்;
பிரெஞ்சுக் காரர்கள் ரோஜாப் பூவையும்;
ஆங்கிலேயர்கள் செர்ரி மலரையும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/49&oldid=1320355" இலிருந்து மீள்விக்கப்பட்டது