பக்கம்:எச்சில் இரவு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


மதுவிலக்கை விரும்பாத வண்டுகள் மலர்களைச் சந்திப்பதற்குச் சென்று கொண்டிருந்தன.

"போவோம் புறப்படுங்கள்" என்றாள் பூங்கோதை.

"எங்கே? குளிர்தூங்கும் குற்றிலத்திற்கா?" என்று கேட்டான் பொய்யா மொழி.

"கோடை வரட்டும், குறாருலத்திற்குப் போகலாம். நாமிருவரும் இப்போது காற்று வாங்க கடற்கரைக்குப் போகலாம்" என்றாள் பூங்கோதை.

காதலி அழைத்தாள்.

அவள் கண்களும் அழைத்தன.

அதனால், பொய்யா மொழி உடனே கடற்கரைக்குப் புறப்பட்டான். பூங்கோதையும் அவனோடு புறப்பட்டாள்.

ஒற்றையடிப் பாதை வழியாக இருவரும் நடந்து சென்றனர். செல்லும் வழியில், அவன் அவளைப் பார்த்து-

"நீ இட்ட அடி நோகிறதா?

எடுத்த அடி கொப்பளிக்கிறதா?" என்று கேட்டான்.

"நான் இட்ட அடியும் நோகவில்லை; எடுத்த அடியும் கொப்பளிக்கவில்லை!" என்றாள் பூங்கோதை.

"அம்பிகாபதியின் காதலியாகிய அமராவதி என்பவள், இட்ட அடி நொந்ததாமே! எடுதத அடி கொப்பளித்ததாமே!" என்றான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/72&oldid=1318206" இலிருந்து மீள்விக்கப்பட்டது