பக்கம்:எச்சில் இரவு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


"அமராவதி என்பவளோ ஒரு மன்னன் மகள். ஞானோ, மண்குடிசையில் வாழ்பவனின் மகள். அவளெங்கே? நானெங்கே? அவளோ மெத்தையில் படுத்திருந்தவள், நானோ, அன்றாடம் செத்தையில் படுத்திருப்பவள் தானே! என் போன்ற ஏழைப் பெண்களுக்கு இட்டஅடிதான் நோகுமா? எடுத்த அடிதான் கொப்பளிக்குமா?" என்றாள் பூங்கோதை.

அவன் சிரித்துக் கொண்டே நடந்தான்.

அவள் அவனைத் தொடர்ந்தாள்.

நீங்காத நீரும்-

துங்காத அலைகளும் உடைய கடற்கரைக்கு இரு வரும் வந்து சேர்ந்தனர்.

ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மத வாதிகளைப்போலவும்; இன்றைய இருபதாம் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் அரசியல் வாதிகளைப் போலவும் அந்தக் கருங்கடல் ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது.

அவள்-அக்கடலின் அலைகளைப் பார்த்தாள்.

அவன் - அக்கடலில் செல்லும் கப்பலைப் பார்த்தான்.

அவள்-மீன்களைப் பார்த்தாள்.

அவன்-மீனவர்களைப் பார்த்தான்.

அவள்-அங்கிருந்த மணல்மேடுகளைப் பார்த்தாள்.

அவன்-மணல்மேடுகளைப் பார்க்காமல்-அந்த மங்கையின் மேடுகளைப் பார்த்தான்!

அவ்வாறு பார்த்தவனை அவள் பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/73&oldid=1318322" இலிருந்து மீள்விக்கப்பட்டது