பக்கம்:எண்ணக்குவியல்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடத்தெங்கு

9

ஏன் தாத்தா! இதை மூடத்தெங்கு என்று சொல்லலாமே.”

"சொல்லலாம், எங்கள் அப்பா இதனை மடத்தெங்கு என வழங்குவது வழக்கம். முடத்தெங்கு என்றாலும், மடத்தெங்கு என்றாலும் ஒன்றுதான். முன்னது தோற்றத் தான் அமைந்த பெயர்; பின்னது செயலால் அமைந்த பெயர்! அவ்வளவுதான்."

"ஏன் தாத்தா! இம்மாதிரி முடம் தென்னையைத் தவிர வேறு மரத்திலும் உண்டோ?”

"உண்டு உண்டு!”

"அந்த மரத்தின் பெயர் என்ன?”

"மனித மரம்.”

"என்ன தாத்தா மனிதனிலுமா முடத்தெங்கு?”

"ஆம். அப்பா! நெல்லிற் பிறந்த பதர்களைப்போல் மனிதருள்ளும் பதர் உண்டு. அவர்கள் மனிதப் பதர் என வழங்கப்படுவார்கள். விரிவு எதற்கு? குரங்கும் கோட்டானும், நாயும் நரியுங்கூட மனிதருள் உண்டு என்றால், முடத்தெங்கு இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

"தாத்தா! அத்தகைய முடத்தெங்குகளை நான் அறியலாமா?"

"ஆகா! நன்றாக அறியலாம். தன்னைப் பெற்ற தந்தையைத் தளர்ந்த வயதில் தள்ளாட விட்டுவிட்டு, மாமனார் வீட்டோடு மகிழ்ந்து வாழும் மகனும் ஒரு முடத் தெங்குதான்!"

"பெற்று வளர்த்த தாயைப் புறக்கணித்துவிட்டு. அவள் தன் வயிற்றைக் கழுவுவதற்காக ஆப்பமும் இட்டலியும் விற்கும்படி செய்து, வந்த மனைவியோடு வாழ்வு நடத்தும் மகனும் ஒரு முடத்தெங்குதான்!”

"தன்னையே நம்பி வந்திருக்கின்ற, மணந்த மனைவியை வீட்டில் வைத்துவிட்டு, மற்ற மாதர்களோடு வாழ்வு