பக்கம்:எண்ணக்குவியல்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

எண்ணக் குவியல்

தமிழ்நாடு-சுதந்திரம் பெற்றும் பொறாமையாற் சுழன்று அல்லலுற்று அவதிப்படும் நம் தமிழ்நாடு-வாழ வேண்டாவா? வாழ வேண்டும் என்றால், அதற்கு வழி ஒன்றே உண்டு.

அது, இந்நாட்டில் சீர்திருத்தக் குளம் ஒன்றை வெட்டி, அதனுள் தீந்தமிழ் ஊற்றதனைக் கண்டு, நல்லொழுக்க நீர் நிறையச் செய்து, என்றும் நன்மை விளை மலர்தனையே விளைத்து, பார் முழுதும் அந்நீரைப் பருக அதனுள் பகையாமைதனை வளர்த்து வாழ்வோம் என்பதேயாகும். வாழட்டும் பகையாமை அழியட்டும் பொறாமை!