பக்கம்:எண்ணக்குவியல்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது'வண்ணாத்திப் பூச்சி' என இனிச் சொல்லாதீர்கள். பல வண்ணம் உள்ள அந்தப் பூச்சியின் பெயர் 'வண்ணத்துப் பூச்சி' என்பதேயாகும்" அப்பூச்சியிலும் காணப்படாத பல வண்ணங்களை மயில் தோகைகளிற் காணலாம். உயிர் வகை கனில் அதிக வண்ணங்கள் உடையதும் அதிக அழகு உள்ளதும் மயில் ஒன்றேயாகும்.


மயிலும் குறளும்

மயில் ஓர் அழகான பறவை. அது தமிழ்நாட்டின் சொத்துக்களுள் ஒன்று. நாட்டிற்கு அழகு, மலை . மலைக்கழகு, சோலை. சோலைக்கழகு, மயில். மயிலுக் கழகு அதன் தோகையே! மயிலுக்குத் 'தோகை' என்றும் பெயர் உண்டு.

ஏற்றுமதி : ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே-அதாவது, கிறிஸ்து பிறக்க ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் பொழுதே- தமிழ்நாட்டிலிருந்து அகில், சந்தனம், அரிசி, மிளகு, தேக்கு, மயில்,முத்து ஆகிய செல்வங்கள் மேல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பெற்றிருக்கின்றன. இவ்வுண்மையை இன்றைக்கும் வரலாறு மெய்ப்பிக்கும். இவற்றுக்கு அன்றும் இன்றும் மேலை நாடுகளில் தமிழ்ப் பெயர்களே இடப்பட்டு வழக்கிலிருந்து வருகின்றன. அவை, அரிசி (Rice)தோகை (Togai), சந்தனம் (Sandal), தேக்கு (Teak)எ.கு.-3