பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46



கிடைக்கத்தக்க விதமாக நமது கழக அமைப்பு இல்லை என்பதை உணரும் போது, திடுக்கிட நேரிடும், ஆனால் நிலைமை அதுதான் – அதனை மறைத்துப் பயன் இல்லை. புண்ணை புனுகு கொண்டு மறைத்தல் கூடாது.

இந்த என் எண்ணம் வலிவு பெற்றதற்குக் காரணம், ஜூலை போராட்டம், எனக்குத் தந்த கசப்புள்ள அனுபவமாகும்.

நான் திருப்தி அடையத்தக்க விதத்தில் நிலைமை அமையவில்லை என்பதை