பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலத் தமிழ்க்கவிதை ❖ 10


வேடிக்கைக்காகவோ சிலரை வேதனைப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ 'தீபம்' இப்படிப் பதில் அளித்திருக்கிறது என்று நான் கருதவில்லை. பதிலில் ஒரளவு உண்மை இருப்பதாகவே உணர்கிறேன்.

பத்திரிகை அலுவலகங்களில் மட்டுமல்ல, பதிப்பகங்களிலும் கவிதை நூல்கள் குவிந்து கிடக்கின்றன. நம்முடைய 'நாட்' விமானங்களைக் கண்டு பாகிஸ்தான் படையினர் பயப்படுவதைப்போல் கவிதை நூல் என்றாலே பதிப்பகத்தார் பயப்படும் அளவுக்கு இன்றைய தமிழ்க் கவிஞர்கள் தடையில்லாமல் எழுதுகிறார்கள்; எவ்வளவோ எழுதுகிறார்கள்; எனினும் அவை ஒவ்வொன்றும் ஒரு மாதிரியாக இல்லாமல் எல்லாம் 'ஒரே மாதிரி'யாகத்தான் இருக்கின்றன.

இத்தனை சூழ்நிலையில், 'எதிர்காலத் தமிழ்க்கவிதை'எப்படி இருக்கவேண்டும் என்னும் பயனுள்ள கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்த தீபத்தை பாராட்ட வேண்டும்.

இன்றைய தமிழ்க்கவிதை பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் எதிர்காலத் தமிழ்க்கவிதைக் கட்டிடத்தை எழுப்பிக் காட்ட முடியும். எனினும் என் ஆராய்ச்சியில் பாரதியைச் சேர்க்கமாட்டேன். அவன் 'உலககவி' என்பது ஏற்கெனவே உறுதிப்பட்டுவிட்டது. இந்தக் கட்டுரையில் தேவை ஏற்படும்போது மட்டும் அவன் தென்படுவான்.

என் பார்வையில் பாரதி தலைமுறைக் கவிஞர்களுள் பாரதிதாசன் ஒருவர்தான் தலைநிமிர்ந்து நிற்பதாகப்படுகிறது. பாரதியின் முற்போக்கு எண்ணங்களையும் ஆவேச உணர்ச்சியையும் உட்கொண்டு தெளிவும் எளிமையும் அழகும் நிரம்பிய கவிதைகளை எழுதியவர் பாரதிதாசன்.'புரட்சிக் கவி’ ஒன்றே போதும்,