பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை & 62 ஒ.ஹென்றியின் சிறுகதைகளில் உயிர்நாடியே அக்கதை களில் அமைந்த திடீர்த் திருப்பம்தான். முதலில் சாதாரணமாகச் செல்லும் கதை. கடைசியில் ஒரு சஸ்பென்ஸ் உண்டாக்கித் திடீர்த் திருப்பத்தில் முடியும். இந்த உத்தியைத் தமிழ் சிறுகதைகளில் கையாண்டு வெற்றி பெற்றவர் ஜெயகாந்தன். இன்றைய புதுக்கவிதைகள் பல, இவ்வுத்தியை உருவமாகக் கொண்டு நம்மைக் கவர்கின்றன. மோசிகீரா மகிழ்ச்சியினால் மரியாதையை நான் குறைத்ததற்கு மன்னித்தருள வேண்டும் நீ சொந்தமாக உனக்கிருக்கும் சங்கக்கவிதை யாதொன்றும் படித்ததில்லை நான் இன்னும் ஆனால் உன்மேல் அளவிறந்த அன்பு தோன்றிற்று இன்றெனக்கு - என்று ஞானக்கூத்தன் புலவர் மோசிகீரனாரிடம் இவ்வளவு பெரிதாய்ப் பீடிகை போட்டுப் பேசுவதி லிருந்தே ஏதோ இருக்கிறது என்று ஆவலோடு எதிர் பார்க்கிறோம். நம் எதிர்பார்ப்பைப் போலவே கடைசி மூன்று வரிகள். அரசாங்கத்துக்கட்டிடத்தில் தூக்கம் போட்ட முதல்மனிதன் நீதான் என்னும் காரணத்தால் என்று திடீர்திருப்பத்தில் முடிகின்றன. இந்த தீடீர்த் திருப்ப உத்தியே கவிதையின் முடிப்பாக அமைந்து அதற்கு ஏற்ற வகையில் எடுப்பும் தொடுப்பும் அமைத்துக் கொடுக்கும் உருவகமாக மாறியுள்ளது.