பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா : 63 விழியுள்ள கனவான் விழாக் கொடியேற்ற வெறும் கைதட்டலுடன் வெள்ளி விழாவன்று களித்தனர், சுற்றி நின்ற கண்ணற்றவர் என்ற கலாப்ரியாவின் கவிதையிலும் இந்த உத்தியே அமைந்துள்ளது. இதன் முதல் ஐந்து வரிகளில் எதுவு மில்லை. கடைசியில் 'கண்ணற்றவர் என்று முடியும் சொல்லே இந்தக் கவிதைக்கு ஒர் உருவ அமைப்பைத் தந்து விடுகிறது. புதுக்கவிதைகளில் சில உரையாடல் உருவத்திலும் அமைந்துள்ளன. நாடகங்களில் பாத்திரங்கள் மாறி மாறி உரையாடுவதைக் காணலாம். நாடகத்திற்கே மிகுதியும் உரிய இந்த இயல்பை புதுக்கவிதை சொந்தமாக்கிக் கொண்டிருக்கின்றது. மேத்தாவின் 'செருப்புடன் ஒரு பேட்டி இதற்கு ஒரு சரியான உதாரணம். ஒர் அரசியல்வாதியையோ ஒரு நடிகையையோ பேட்டி காண்பதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் உரையாடல் வினா விடை வடிவத்தில் அமையும். அதேபோல் இந்தப் பேட்டியும் இருக்கிறது: தீவிரமாக எதைப் பற்றியாவது நீங்கள் சிந்திப்பதுண்டா? உண்டு, சில தேசங்களையும் சில ஆட்சிகளையும் பார்க்கும் போது மீண்டும் நாங்களே சிம்மாசனம் ஏறிவிடலாமா என்று யோசிப்பதுண்டு என்று இந்த நீண்ட பேட்டி முடிகின்றது.