பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை : 64 இந்தக் கவிதையில் நாடகத்தில் அடுத்தடுத்துப் பேசுவோர் பெயர் குறிப்பிடப்படுவதைப் போல எதுவுமில்லை. எனினும் ஒவ்வொரு வரியிலும் உரையாடல் தொனி வெளிப்படுகிறது. 1973 தீபம் ஆண்டுமலரில் புதுக்கவிதைகள் பற்றி திரு. சக்திக்கனல் எழுதிய கட்டுரையில் ஒர் இடத்தில் ‘விடுகதைக் கவிதைகள்' என்னும் தொடரைக் கையாளுகிறார். போட்டவர்களுக்கும் சேர்த்துப் புரியாம்ல் போய்விடுகிற விடுகதைக் கவிதைகளும் உண்டு. இவற்றைப் புதுக்கவிதை என்றழைப்பதைவிடப் புதிர்க் கவிதை என்று அழைப்பது மிகவும் பொருந்தும்' என்கிறார். அவ்வளவு எளிதாக எல்லாருக்கும் புரிந்து விடக்கூடாது என்ற பண்டித மனப்பான்மையோடு எழுதப்படும் கவிதைகளும் இல்லாமல் இல்லை. அதே நேரத்தில் விடுகதை உருவத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு அதைக் கையாளும் கவிஞர்களும் ஒரு சிலர் இருக்கிறார்கள். இரவில் வாங்கினோம் விடியவே இல்லை இரண்டே வரிகளில் அமைந்த இந்தக் கவிதை சமீப காலமாய்ப் பெரிதும் பாராட்டப் பெற்ற கவிதை. இந்த இரண்டு வரிகளைப் படித்துவிட்டு என்ன என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொஞ்ச நேரம் யோசித்துப் பார்க்கிறோம். இப்படி யோசிக்க வைப்பதே விடுகதை உத்தி. விடுகதையில் தலைகீழாக விடையைக் குறித்திருப் பார்கள். இங்கே தலைப்பிலேயே விடை தரப்பட்டுள்ளது "சுதந்திரம்' என்று. எங்கள் வீட்டுக்