பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டில் குட்டி போட்டது தொட்டில் என்னும் வைத்தியலிங்கத்தின் 'தொட்டில் என்னும் கவிதையும் விடுகதை உருவத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு கவிதை. புதுக்கவிதையின் உள்ளடக்கம் எதுவாக இருந்தாலும் அதை நாட்டுப்பாடல் உருவத்தில் வெளிப்படுத்த முடியும் என்று சிலர் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். "தெருக்கூத்து' என்னும் ஏடு இச்சோதனை முயற்சிக்காக தொடங்கப் பெற்று இதுவரை நான்கு இதழ்களை வெளியிட்டுள்ளது. காடெல்லாம் சுற்றிக் காராம்பசு கொண்டு வந்தோம் நாடெல்லாம் சுற்றி நல்ல பசு கொண்டு வந்தோம் சீமை பல சுற்றிச் சிவப்புப் பசு கொண்டு வந்தோம் சிவப்புப் பசு உதைக்குமின்னு சில பேர்கள் சொன்னதினால் பால் கறக்க எங்க வீட்டில் பக்கத்தில் போகவில்லை பக்கத்தில் போகாது பாலெல்லாம் வீணாச்சு என்ற தமிழவனின் கவிதை நாட்டுப்பாடல் உருவத்தோடு உள்ளடக்கத்தாலும், ஆரோவடபுடிச்சி அய்யன் தேரு நின்னுடுச்சி என்ற ஞானக்கூத்தனின் கவிதை உருவத்தாலும் சிறந்து விளங்குகின்றன.