பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 66 கவிதையின் கட்டழகைச் சரியாகக் காட்டுவதில் முரண்தொடைக்கு முக்கிய பங்கு உண்டு. பழந்தமிழ்க் கவிதைகளில் இடையிடையே முரண்தொடை அமைந் திருக்கக் காணலாம். இன்றைய புதுக்கவிதையோ முரண் தொடையையே உருவமாகக் கொள்ளத் தொடங்கி விட்டது. நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் ஆடை வாங்குவதற்காக என்று நா. காமராசனும் நாங்கள் சேற்றில் கால் வைக்கா விட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது என்று கவிசோதியும் விலைமகளிரையும் உழவர்களையும் பேச வைக்கும்போது முரண்தொடைக்கு உரிய வலிமையை உணர்ந்துகொள்ள முடிகிறது. இவை வெறும் 'Staement ஆக அமைந்திருப்பதைப்போல் தோன்றலாம். காந்தி கண்ட ராம ராஜ்யத்தில் கூனி உண்டா? உண்டு நிமிர்ந்திருப்பாள் யாருக்கும் அடையாளம் தெரியாது என்னும் தமிழன்பனின் கவிதை முரண்தொடை உருவத்தை முழுமையாக எடுக்க முயல்கிறது எனினும் இதில் செறிவில்லை. வரங்களே சாபங்கள் ஆனால்