பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீரா ❖ 5


சூழல், கட்டுரை எழுதப்பெற்ற காலம் ஆகியவற்றின் நிர்ப்பந்தங்கள் கட்டுரையில் தூக்கலாகத் தெரிகின்றன.

தான் சுவைத்து மகிழ்ந்த மரபுக் கவிதைகள் புதுக்கவிதைகளை அறிமுகப்படுத்துவதில் பிற கவிஞர்களிடமும் இல்லாத பரந்த மனப்பான்மையையும், கவிதைகளின் சிறப்பம்சங்களைத் தொட்டுக் காட்டுவதில் அபூர்வமான புலமை ரசனையையும் காணலாம்.

எல்லாக் கட்டுரைகளிலுமே ஒரு சமூகச் சார்பு நிலையை கவிஞர் மீரா வற்புறுத்துகிறார். ஆனாலும் கவிதையின் அழகம்சங்களை இழந்துவிட சம்மதிப்பதுமில்லை. சான்றாக, ஞானியின் 'கல்லிகை' கவிதையை 'கவிதையில் கற்பனை' என்ற தலைப்பில் வைத்து விமர்சிப்பது மீராவின் அணுகுமுறைக்கு ஒரு சோற்றுப் பதம் எனலாம். ❖

 

'எதிர்காலத் தமிழ்க்கவிதை' என்ற முதற்கட்டுரை 1973இல் எழுதப்பட்டிருக்கிறது. புதுக்கவிதையை முழுமையாக ஏற்றுக்கொள்வதில் ஒரு தயக்கம் அப்பொழுது பலருக்கு இருந்தது; கவிஞர் மீராவுக்கும் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.

"Modern poetry' என்பதை புதுக்கவிதை என்று அவர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அதற்கு ஒரு விரிந்த பொருள் தருகிறார். யாப்புள்ள கவிதை. யாப்பற்ற கவிதை, யாப்பு நெகிழ்ந்த கவிதை, உரைநடைக் கவிதை - என்று சகல வடிவங்களையும் உள்ளடக்கியதாக 'புதுக்கவிதை' என்ற பதத்தை அவர் ஏற்றுக்கொள்வது ரசமான கருத்து.தமிழில் வேறு யாரும் இது மாதிரி அர்த்தப்படுத்திக் கொள்ளவில்லை என்று கருதுகிறேன், ஆனாலும்{{|hws|உள்ளடக்க|உள்ளடக்கரீதியாக}}