பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலத் தமிழ்க்கவிதை ❖ 6


ரீதியாக' நடப்பியல் நெறியும் மார்க்சீய ஒளியும்' துவங்கும் கவிதைகளையே அவர் வரவேற்கிறார். புதுக்கவிதையை அதன் புதிய உள்ளடக்கத்திற்காகவே வரவேற்று அங்கீகரித்த கவியாக மீராவை முதல் கட்டுரை அடையாளம் காட்டுகிறது.

இரண்டாவது கட்டுரை கவிதையில் கற்பனை பற்றியது. நூலில் மிகவும் நயமாக எழுதப்பட்ட கட்டுரை இது. மரபுக்கவிகளான மஹாகவி, கம்பதாசன், தமிழ்ஒளி, பொன்னிவளவன், சுரதா ஆகியோரின் கற்பனையையும் புதுக்கவிஞர்களான காமராசர், தமிழவன், சிற்பி போன்றோரின் கற்பனைகளையும் உரசிப் பார்த்து மகிழுகின்றார்.

ஆய்வுச் சீர்மையுடன் அமைந்த பயனுள்ள கட்டுரை ‘புதுக்கவிதையில் உருவம்.' உருவமற்றதுதானே புதுக்கவிதை என்று கருத்துப் பதிலாக புதுக்கவிதையின் உருவம் திருமலை நாயக்கர் மஹால் துணைப்போல் தூலமாகத் தெரியவில்லை. மண்ணில் மறைந்திருக்கும் பொன்னைப்போல் சூக்குமமாகவே தெரியக்கூடியது 'என்கிறார் மீரா. விதவிதமாக நவநவமாக வெளிப்படும் உத்திமுறைகளே புதுக்கவிதையின் உருவமாகவும் வடிவமாகவும் அமைகிறது என்ற கருத்தை முன் வைக்கிறார். ஆய்வுமுறையும் முடிவும் மகிழ்ந்து ஏற்கத்தக்கதே.

இன்றையப் புதுக்கவிதைகளின் பெருவிளைச்சல் கவிதையின் எதிர்காலம் பற்றிய கேள்விக் குறியை எழுப்புகிறதல்லவா? இந்தப் பின்னணியில் அமைந்தது 'புதுக்கவிதையின் எதிர்காலம்' என்ற கட்டுரை. புதுக்கவிதையின் வரலாற்றையும் வளர்ச்சியையும் சொல்லி புதுக்கவிதை பிழைக்க சில வழிகளும் கூறுகிறார் மீரா.