பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீரா ❖ 7

 ‘புதுக்கவிதை வசனத்தில் எழுதப்படுவது என்பதால் வசனத்தில் எழுதப்படும் சகல இலக்கியத் துறைகளின் போக்குகளையும் ஆழங்களையும் உள்வாங்கிக்கொள்ளவேண்டும், என்கிறார். புதுக்கவிதையில் நாடகமும் கதையும்கூட வரவேண்டும் என்கிறார். கவிஞரின் ஆசை பேராசை என்றுதான் சொல்ல வேண்டும்.

'பாடத்திட்டத்தில் புதுக்கவிதை' என்ற கட்டுரை பல்கலைக்கழக வளாகத்தில் மரபு வளர்க்காத ஆக்கப் பயிரை புதுமைக் கவிகள் தழைக்கச் செய்திருப்பதைப் பற்றியது. மாணவக் கவிஞர்களும் இளைஞர்களும் கவிதையின் பிரதேசத்தில் படிப்பும் படைப்பும் நிகழ்த்துவது பற்றிய மகிழ்ச்சிமிக்க விவரங்கூறும் கட்டுரை இது. 'எதிர்காலத் தமிழ்க்கவிதை' என்ற நூலுக்கு பொருத்தமான முடிப்புக் கட்டுரையாக அமைகிறது.

இந்தக் கட்டுரைகளில் தரப்பட்டுள்ள கருத்துக்களை கவனமாக நோக்கும்போது கடந்த பத்தாண்டுகளில் புதுக்கவிதையின் வளர்ச்சியும் தெரிகிறது. அயர்ச்சியும் தெரிகிறது. கவிஞர் மீரா அவர்களின் கவிதைச் சிந்தனைகளில் ஏற்பட்ட படிப்படியான மாற்றங்களும் தெரிகிறது.

 

இது மாதிரிக் கட்டுரைகள் கவிஞர்களால் எழுதப்படுவதில் ஒரு பெரிய நன்மை இருக்கிறது. கவிதையைப் படைக்கிறவர்களே சொல்லும்போது படிக்கிறவர்களுக் ஒரு புதுச்சுவை கிடைக்கிறது.

எதை எழுதினாலும் கவிதையின் நயத்தோடு எழுதும் ஆற்றல் உடையவர் மீரா. அவர் உரைநடை எழுத்தில்கூட