பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 68 ஒவ்வொரு வரியும் ஊசலின் அசைவுக் கோணத்தைக் காட்டுவதைப் போலவும் அச்சிடப்பட்டுள்ளன. அவை நம் கண்முன்னர் கடிகாரத்தின் ஊசலையே கொண்டுவந்து நிறுத்திவிடுகின்றன. செவிநுகர் கனியாக இருந்த கவிதை கண்ணால் அனுபவிக்கத்தக்கதாகி விட்டது. இத்தகையக் கட்புல 'உருவத்தை (Visual Form) தமிழ்ப் புது கவிஞர்களும் கையாளுகின்றார்கள். அரிசிக்கடையை நோக்கிச் செல்லும் மக்கள் வரிசை, நத்தையைப்போல் ஊர்ந்தும், பாம்பைப்போல் வளைந்தும், தேனிக்களைப்போல் இரைச்சலிட்டு கொண்டும் செல்வதாக கே.எ.அப்பாஸ் ஒரு சிறுகதையில் வர்ணிப்பார். இதேமாதிரி அலுவலகம் செல்லப் பேருந்துக் காகக் காத்திருந்து வேள்வி நடத்தும் மக்கள் வரிசையைச் சித்திரிக்க எழில் முதல்வன் 'கியூவிலே ஒரே கூட்டம்’ என்று தொடங்குகிறார். இதை ஒரே வரியாக எழுதாமல் கியூவிலே என்பதை இ & வி லே என்று ஒவ்வொரு எழுத்தையும் ஒன்றன்கீழ் ஒன்றாகவும் அதையடுத்து ஒரே கூட்டம் என்பதை ஒரே வரியாகவும் எழுதிக் காட்டுகிறார். தனித்தனி எழுத்தாக அமைக்கும் போது மக்கள் வரிசையும் ஒரேக் கூட்டம் என்று ஒரே வரியில் சேர்ந்து எழுதும்போது மக்கள் நெரிசலும் நம் பார்வையில் படுகின்றன. ஒருவகையில் பழைய சித்திரக் கவிக்குத் திரும்புவதைப்போல் தோன்றும். இந்தச் சோதனையில் நம் புதுக்கவிஞர்களுக்கு ஆர்வம் பெருகி வருகிறது என்பதைத் தமிழவனின் 'ஒரு கற்புள்ள பெண்பாவையும் குருவிக்கரம்பை சண்முகத்தின் பூ