பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 69 மயக்கத்தையும் வைத்தீஸ்வரனின் 'ஆசையையும் ரங்கராஜனின் 'திலோத்தமை சிந்திக்கிறாள் கவிதையும் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இன்றைய புதுக்கவிதைகளிற் சில பழைய அகவல், விருத்தம் முதலான வடிவத்தைச் சிறிது சிதைத்தோ அல்லது மாற்றியோ எழுதப்பட்டதாய்த் தோன்றுகின்றன. கண்ணிமையாக் கால் தோயாத் தேவர் நாட்டில் திரிசங்கைப் போகவிடமாட்டேன் என்று ஒருமுட்டாள் சொன்னது பேராபத்தாச்சு என்னும் ஞானக்கூத்தனின் கவிதை, காய் காய் மா மா என்னும் எண்சீர் விருத்த யாப்பில் அமைந்திருக்கிறது. எனினும் முதற் சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை வேண்டும் என்ற மரபும், முதலடியின் முதற் சீரின் எதுகை இரண்டாமடியின் முதற்சீரில் அமைய வேண்டும் என்னும் விதிமுறையும் இங்கு மீறப்பட்டுள்ளன. இவ்வாறே விளம், மா மா என்னும் வாய்பாட்டில் அமைந்த அறுசீர் விருத்தத்தை இவர் சிறிது மாற்றிக் கையாண்டுள்ள கவிதைகளும் 'அன்று வேறு கிழமை' என்னும் கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இத்தகைய விருத்தப் பாக்களில் எதுகை மோனை என்னும் இடர்களைப் பொருட்படுத்தாது - கம்பனைப் போன்ற வர்கள் தடையோட்டக்காரர்களைப்போல மிக லாகவ மாகத் தாவிக் குதிக்கிறார்கள் என்றால் ஞானக்கூத்தனைப் போன்ற புதுக்கவிதையாளர்கள் 'ஹடில்ஸ் இல்லாத வெறுந்தரையில் ஒடுவதைப்போல எதுகை மோனைகள் இல்லாத புதிய கவிதை வடிவத்தை வெற்றியுடன் கையாளுகிறார்கள் என்று சொல்லலாம். இவ்வாறு பழைய கவிதை வடிவத்தைச் சிறிது மாற்றியும் திரித்தும் வழங்கும் புதுக்கவிதைப் படைப் பாளிகளுள்