பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 70 இன்குலாப், நா. காமராசன், தமிழன்பன் ஆகியோர் பாடல்களில் கலியோசையும், அப்துல் ரகுமான், அபி, மீரா போன்றோர் பாடல்களில் அகவல் ஓசையும் இருக்கக் காணலாம். புதுக்கவிதையின் உருவம் திருமலை நாயக்கர் மஹால் துணைப்போல் தூலமாகத் தெரிவதில்லை. மண்ணில் மறைந்திருக்கும் பொன்னைப்போல் சூக்குமமாகவே தெரியக்கூடியது. கவிஞனின் உணர்வுக்கு ஏற்ப - அவன் கையாளும் உள்ளடக்கத்திற்கு ஏற்ப புதுக்கவிதையின் உருவங்கள் அமைகின்றன. இவற்றைக் கண்டுகொள்ள நம் கண்ணும் மனக் கண்ணும் ஒருவகையில் உருப்பெருக்கும் ஆடி (Microscope) ஆகவேண்டும். அப்போதுதான் புதுக் கவிதையின் அக உருவத்தின் சிறப்பையும் தெரிந்து கொள்ளமுடியும். படிமம், குறியீடு போன்ற கலை வெளிப்பாடுகளைப் புதுக்கவிதையின் அக உருவம் எனலாம். மின்வெட்டுப்போல் சொற்களையமைத்து இதயத்தில் சித்திரம் தீட்டும் இவ்வகை உருவத்தோடு கூடிய புதுக்கவிதைகளை எழுதுவோர் தருமு அரூப் சிவராம், அப்துல் ரகுமான், அபி போன்ற ஒரு சிலரே. திரு. கி.ராஜநாராயணன் சொல்வதுபோல் பூக்களில் எத்தனை நிற உருவங்கள் உண்டோ அத்தனை உருவங்கள் கவிதைகளிலும் உண்டு. தமிழ் அம்மை இப்போதெல் லாம் புதுப்புது வடிவுகளில் கவிதையைப் பெற்றெடுத்துக் கொள்கிறாள்' என்றுதான் சொல்ல வேண்டும். 綠 *్మ• அகில இந்திய வானொலி திருச்சி I974