பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை 72 மரபுக்குப் பாசறையாக விளங்கும் பல்கலைக்கழகங்களும் இப்போது புதுக்கவிதைக்கு மணவறையாக மாறியுள்ளன. இந்த மாற்றத்தைத் தம் கண்ணுக்கு முன்னர் கண்ட பிறகே புதுக்கவிதையின் தந்தை நா. பிச்சமூர்த்தி மறைந்தி ருக்கிறார். திசைகாட்டும் கருவி இல்லாத காலத்தில் எச்சரிக்கைகளை மீறிக் கடலில் நெடுந்துரம் பயணம் செய்தான் கொலம்பஸ்; பின்னர் அமெரிக்காவுக்குச் செல்ல வழிவகுத்தான். முதலில் தன்னந்தனியாகப் புதுக்கவிதை முயற்சியை மேற்கொண்ட ந. பிச்சமூர்த்தி ஏறத்தாழக் கொலம்பலைப்போல ஒரு துணிச்சல்காரர்தான். 'பாதையில்லாக் காட்டில் பயணம் செய்யும் முயற்சி என்று அவரே தம் அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் போட்ட பாதை இன்று புதுக்கவிதைக்கு ராஜ பாட்டையாகிவிட்டது. புதுக்கவிதையின் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு முன் அதன் வரலாற்றையும் வளர்ச்சியையும் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது. வசதிக்காகப் புதுக்கவிதையின் காலகட்டத்தை மூன்றாகப் பகுக்கலாம். 1930 முதல் 1940 வரை முதற்கட்டம்; 'மணிக்கொடி’யும், கலாமோகினி'யும் புதுக்கவிதைக்கு மேடை அமைத்த காலம். 1960 முதல் 1970 வரை இரண்டாவ்து கட்டம்; எழுத்தும் நடையும் புதுக் கவிதைக்கு ஒத்திகை நடத்திய காலம். எழுபதுக்குப் பிறகு மூன்றாவது கட்டம்; 'கசடதபற'வும் வானம்பாடி'யும் புதுக்கவிதையை அரங்கேற்றிய காலம். முதற்கட்டத்தில் - நாற்பதுகளில் ‘வசன கவிதை' என்னும் பெயரிலேயே புதுக்கவிதை அழைக்கப்பட்டது. பாரதியின் காட்சிகள் என்னும் வசனகவிதைப் பகுதியும் அமெரிக்கக் கவிஞன் வால்ட விட்மனின் புல்லின்