பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 73 இதழ்கள் என்னும் கட்டற்ற கவிதைத் (Free Verse) தொகுதியும் தான் தமிழ்ப் புதுக்கவிதையின் ஊற்றிடங்கள். கவிதையை வசனத்திலும் எழுதலாம் என்ற கருத்தில் பிறந்தது வசனகவிதை. இலக்கணத்தை மீறவும் முடியாமல் அதேநேரத்தில் மீறவேண்டும் என்னும் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் வெளிவந்தது கட்டற்ற கவிதை. இந்த இரண்டின் பரிணாமம்தான் இன்றைய புதுக்கவிதை. மரபுக்கவிதையில் எதுகையும் மோனையும் எதேச்சதிகாரம் செலுத்துவதாகவும் அவற்றின் இரும்புக்கரங்களில் கருத்துக்கள் சிக்கித் திணறுவதாகவும் ஒர் எண்ணம் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏறக்குறைய எல்லா நாட்டிலும் தலைதுாக்கியது. அதன் விளைவாக யாப்பு எதிர்ப்பு வேகம் பெற்றது. 'ஓர் அப்பளத்தின் மரணம் போன்ற தமிழ்ப் புதுக்கவிதைகளில் உள்ளதைப்போலவே எதுகை மோனையை - யாப்பிலக்கணத்தை நையாண்டி செய்யும் போக்கு ஐரோப்பிய மொழிகளிலும் காணப்படுகிறது. செத்துப்போனவனைப் பற்றிய ஒரு லிமரிக் (Limerick). துப்பாக்கியால் சுடப் பட்டு அவன் செத்துப் போனானாம். அவன் பெயர்'lohn Bun என்பதாம். உண்மையில் அவன் பெயர் Iohn Bun இல்லையிாம். பின் ஏன் 'Bun என்று முதலில் சொன்னாய் என்றால் என்ன செய்வது 'Gun' என்பதற்குக் கடையெதுகை'Bunதானே என்கிறான்லிமரிக் கவிஞன். Here lise John Bun He was killed by a gun His name was not Bun but wood But wood would not rhyme with gun but Bun would.