பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை . 74 கல்லறைவரை கூட ஒருவனைத் துரத்தும் எதுகை மோனைகளின் பிடியிலிருந்து கவிதை விடுதலை பெற்றாக் வேண்டும் என்பதில் இந்த நூற்றாண்டுக் கவிஞர்கள் அனைவருமே ஒன்றுபட்டிருக்கிறார்கள். இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு மோனைத் தேர்கள் தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக் கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக் கவிதை இந்த ஜனநாயக யுகத்துக்குப் புதுக்கவிதை பொருத்த மானது என்கிறார் மு. மேத்தா. அசை சீர்தளை அடி என்றெல்லாம் மரபுக் கவிதைகளுக்கு உரிய யாப்பியல் புதுக்கவிதையில் 'சொல் அளவில் சுருங்கி நிற்கிறது; கருத்து வெளியீட்டுக்குரிய அடிப்படைச் சாதனம் சொல்தான் என்று கண்டு கொள்ளப்பட்டிருக் கிறது. Best words in best order STsirgy G5travíflL& GailgoSöG இலக்கணம் சொன்னார். Iwant a fairer word than fair, a brighter word than bright என்று கீட்ஸ் ஒளிபடைத்த எழில் படைத்த சொற்களை வேண்டி நின்றான புதுக்கவிஞர்களோ பேச்சுவழக்கில் உள்ள புதுப்புதுச் சொற்களைத் தேர்நதெடுப்பதில் கவனம் காட்டுகிறார்கள்.