பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 75 கவிதை வேண்டுமென்றால் சொற்களைக் கூராக்கு இசையை ஒதுக்கிவிடு உருவகங்களை உயிராக்கு சிந்தனைகளை நேராக்கு உபயோகமற்ற பாத்திரங்களை ஏற்றிவைக்கும் மச்சிருட்டாகக் கவிதையை நினைக்காதே என்று கா.நா.சு கூரிய சொல்லாட்சியுடன் உருவ உத்திப் புதுமையை வற்புறுத்துகிறார். கா. ந.சுவைப் போலவே புதுக்கவிதைச் சோதனையாளர் களுள் ஒருவரான சி.சு.செல்லப்பா 1962ல் புதுக்குரல்கள் என்னும் பெயரில் ஒரு புதுக்கவிதைத் தொகுதியை வெளியிட்டார். புதுக்கவிஞர்களின் குரல் மரபுக் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதால் அதற்கு அப்பெயர் வைத்தார். வித்தியாசமான இந்தப் 'புதுக்குரல்"தான் புதுக்கவிதையின் வரவுக்கு நியாயம் கற்பிக்கிறது. வாழ்வுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. ‘புதுக்குரல் தொகுப்பில் ஒரு கவிதை; உன் கை நகம்’ என்ற பசுவய்யாவின் கவிதை. நகத்தை வெட்டியெறி அழுக்குச் சேரும் நகத்தை வெட்டியெறி - அழுக்குச் சேரும் தொடங்கும்போதே பேச்சுதொனி; வித்தியாசமான குரல். அகிலமே சொந்தம் அழுக்குக்கு நகக்கண்ணும் எதற்கு அழுக்குக்கு இடையில் இப்படி ஒரு குத்தல்; ஏளனம். பிறாண்டலாமே - எதிரியைப் பிறாண்டலாமே?