பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை . 76 இப்படி ஒரு சிலாகிப்பு வினா. பிறாண்டலாம் பிடுங்கலாம் குத்தலாம் கிழிக்கலாம் ஆரத் தழுவிய அருமைக் கண்ணாளின் இடது தோளில் ரத்தம் கசியும் வினாவுக்கு அதிர்ச்சி தரத்தக்க விடை. வலது கை நகத்தை வெட்டியெறி அல்லது தாம்பத்திய பந்தத்தை விட்டுவிடு இரண்டில் ஒன்று - என்ன செய்யப் போகிறாய் என்ற எதிர்பார்ப்பு. நக அழுக்குப் பற்றிய இந்தக் கவிதை எழுத்துப் பத்திரிகையில் வந்தபோது இது என்ன கவிதையா என்று முகம் சுளித்து அருவெறுப்புக் கொண்டவர்கள்கூட சிறிது காலத்திற்குப் பிறகு இதுதான் அசல் புதுக்கவிதை என்று புரிந்து போற்றினார்கள். வெறும் நகம்தானே என்று நினைத்தால் இது உடல் நலத்திற்கு அறிவுரை சொல்லும் ஒர் ஆசாரக்கோவைச் செய்யுளைப் போல் தோன்றும். ஆனால் இங்கே நகம் குறியீடாக இருக்கிறது. மனிதனின் சிறுமைக்கு அடையாளச் சின்னமாய் இருக்கிறது. நகத்தை வைத்து மனிதனின் சிறுமைத்தனத்தைக் கண்டனம் செய்யும் கவிஞரின் குரல் புதுக்குரல்தான். அற்பமான நகத்தைப்போலவே உயர்ந்த காதலையும் புதுக்கவிஞர்கள் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை. காதலை முதன்மைப்படுத்திய சங்க இலக்கியத்திலும் பிரிவைப்பற்றிய பாலைப்பாடல்கள் அதிகம். என்னதான் பிரிவு பொல்லாததாக-கொடியதாக இருக்கட்டுமே அதற்காகக் கணவனோ மனைவியோ உயிரை விடுவதைப்