பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 77 போல் உணர்ச்சிமயமானது இயல்புதானா? 'இருக் கின்றேன் சாகவில்லை என்ற குரலைப் புதுக்கவிஞர் களிடம் கேட்பது அரிதுதான். மாறாகப் பிரிவிலும்கூட நடைமுறை நிகழ்ச்சிகளை முடிச்சிபோட்டுப் பார்ப்பார்கள்; எதார்த்தமாகச் சித்திரிப்பார்கள். வல்லிக்கண்ணனின் ஒரு பிரிவுக் கவிதை உன்னை நான் மறக்கவும் கூடுமோ?' என்று கவிதை இயல்பாக ஆரம்பமாகிறது. எல்லாக் காதலர்களைப்போலவே வல்லிக்கண்ணனின் காதலனுக்கும் தன் காதலியைக் கணப்பொழுதும் மறக்க முடியவில்லை. காரணம் ஒன்றா இரண்டா? காதலன் அடுக்குகிறான். மழை ஒயாது சலசலக்கிறது உன் பேச்சைப்போல நாய் அடிக்கடி குரைக்கிறது உன் குறைகூறல் போல இரவுகளில் ஆந்தைகளின்அலறல் என்துக்கத்தைக் கெடுக்கிறது உன் முணுமுணுப்புப் போல என் முன்னே நீ இல்லை யெனினும் என் அன்பே உன்னை நான் எப்படி மறப்பேன் என்று முடிக்கிறான். இதுதான் மண்ணுலகத்துக் காதல்; மானிடக் காதல். இதுதான் புதுக்கவிதைக் காதல். பலசரக்குச் சிட்டையைப்போல் முன்பெல்லாம் கவிஞர்கள் கைவசம் ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். நிலவு, தென்றல், ஆறு, குன்றம், கிளி, மயில், செடி, கொடி என்று அந்தப் பட்டியல் நீளும். புதுக்கவிஞர்களோ எலி, பூனை, தவளை, நாய் என்று மரபுக் கவிஞர்களால் கைவிடப்பட்ட உயிரினங்களுக்கு அபயம் அளித்திருக்