பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 78 கிறார்கள். புதுக்கவிதைகளில் நாய்' என்று தலைப்பிட்டு டாக்டர் பட்டத்திற்கு யாரேனும் ஆராய்ச்சி செய்யலாம். அந்த அளவுக்கு நாய்களைப் பற்றிய கவிதைகள் வெவ்வேறு கோணத்தில் வெளிவந்துள்ளன. 'நடுநிசி நாய்கள்' என்று ஒரு கவிதை நூலுக்குத் தலைப்பே வைக்கப்பட்டிருக்கிறது. மரபிலிருந்து புதுக்கவிதை எப்படி வித்தியாசப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுகூட ஒரு சான்றுதான். எதைப்பற்றிப் பாடினாலும் இந்தப் பார்வை வித்தியாசம் தான் முக்கியம். நிலாவைப்பற்றி, இதுவரை வெளிவந்துள்ள கவிதைகள் நட்சத்திரங்களைப்போல் எண்ணற்றவை. நிலா நானூறு' என்று ஒரு தொகுப்பே வெளிவந்திருக்கின்றதென்றால் பாருங்கள். அவை யெல்லாம் புனைவியல் பாங்கில் எழுதப்பட்டவை. நிலவைப் பெண்ணாகவும், பெண்ணை நிலவாகவும் உருவகப் படுத்துபவை. சோளப்பொறி மத்தியிலே தோன்றுமிந்த சோதிகள் சுட்டுவச்ச தோசையைப் போல் என்ற கிராமியப் பாட்டில் உள்ள ஒரு பார்வையைப் புதுமைப்பித்தன் சுவைத்துப் போற்றியிருக்கின்றார். நிலவைத் தோசையாகப் பார்க்கும் புதுப்பார்வை மரபுக்கவிதையில் அபூர்வமாகக் காணக்கூடியது. இதே பார்வை எவ்வளவு வீரியத்துடன் புதுக்கவிதையில் வெளிப்படுகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். விட்டெறிந்த இட்டலியோ கட்டிவைத்த பழஞ்சோறோ கொட்டிவைத்தகப் தயிரோ சுட்டு வைத்த அப்பம்தானோ என்ன இழவே யானாலும் கிட்ட வந்து எட்டவில்லை