பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா

79 பாடுபட்ட ப்ாட்டாளி கொட்டாவி விடுகின்றேன் என்று இ.அண்ணாமலை எதார்த்தமாகச் சித்திரிக்கிறார். வழிவழியாக அழகியல் வர்ணனைக்கு இடமாய் இருந்த நிலவைப் பார்த்து என்ன இழவோ என்று பசித்தவன் மனநிலையில் வெளிப்படுத்தும் வகையில் அடுக்கிக் கொண்டு போவது இதுவரை இல்லாத புதுமை. பண்டைப் புராணங்கள், இலக்கியங்கள் எல்லாம் புதுக்கவிஞர்களின் பார்வையில் புத்துயிர் பெற்று விளங்குகின்றன. தேவர் உலகத்தில் திரிசங்கை நுழைய விடாததால் அவனுக்காக விசுவாமித்திர முனிவர் அந்தர சொர்க்கத்தை உருவாக்கிய இக்கதை ஏடு அறிந்ததுதான். ஞானக்கூத்தன் இதை வைத்துத் தன் கற்பனையை வளர்க்கிறார். போட்டிச் சொர்க்கம் உருவாவதைப் பொறுக்காத தேவர்கள் கடவுளிடம் ஓடி வந்தார்களாம். பிரம்மாவுக்கு எதிர்ப்பட்ைப்பு வேண்டாம் என்று கெஞ்சினார்களாம். சினம் தணிந்தான் தவஞானி. ஆனால் அந்தக் கணம் மட்டும் படைத்தவைகள் உலகில் என்றும் இருந்துவர வேண்டுமென்றான்; வரமும் பெற்றான். அன்றுமுதல் பிரம்மாவும் விஸ்வாமித்ர மாமுனியும் படைத்தவைகள் அடுத்தடுத்து வாழ்ந்துவரல் வழக்காச்சு. எடுத்துக்காட்டு மயிலுக்கு வான்கோழி புலிக்குப் பூனை குதிரைக்குக் கழுதை குயிலுக்குக் காக்கை கவிஞர்களுக்கு எந்தாளும் பண்டிட் ஜீக்கள் கடைசி வரியில்தான் கவிதையின் நோக்கம் சரியாக வெளிப்படுகிறது. பண்டிதர்களை மூச்சுத் திணறவைக்கும் வகையில் ஒரு பிடிபிடிக்கப் புராணக் கதையைத் தனக்குச் சாதகமாகத் திருப்பிக்கொள்ளும் சாதனை புதுமைதான்.