பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத் தமிழ்க்கவிதை * 80 அன்றாட வாழ்க்கையில் காணும் பிரச்சினைகளையும் புதுக்கவிஞர்கள் அலசிப் பார்க்கத் தயங்கவில்லை. உதாரணத்திற்கு ஒன்று. தேசத்தை அச்சுறுத்திக் கொண்டி ருப்பது மக்கள் தொகைப் பெருக்கம். இராமேஸ்வரம் பாசஞ்சர் வேகத்தில் உணவு உற்பத்தியும் வைகை எக்ஸ்பிரஸ் வேகத்தில் மக்கள் பெருக்கமும் உள்ள இந்த நாட்டுக்குக் குடும்பக் கட்டுப்பாடு வரவேற்க வேண்டிய ஒரு கோட்பாடுதான். ஆனால் அதை அமுல் நடத்தும் போது அவ்வப்போது காட்டும் கெடுபிடிகளை, அதிகாரிகளின் அத்துமீறல்களை வரவேற்க முடியுமா? திருமணம் ஆகாதவர்களையெல்லாம், இளமையின் நறுமணத்தை நுகராதவர்களையெல்லாம் அறுவைச் சிகிச்சைக்கு ஆளாக்கலாமா? புள்ளி விவரத்தை உயர்த்துவதற்காக கிழிந்த தாளாக்கலாமா? தணிகைச் செல்வனின் 'சிவப்பு முக்கோணம்’ என்ற கவிதையில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை ரப்பராக்கிச் சாடுகிறார்: - இந்த ரப்பர் தப்பான எழுத்தை மட்டுமே அழிக்கும் என்றார்கள். தாளையே அழித்துவிட்டதே என்கிறார். எத்தனை அற்புதமான சொற்சித்திரம். இதே போல் நம் உள்ளத்தை உருக்கும் எந்த நிகழ்ச்சியும் புதுக் கவிஞர்களின் கவனத்திலிருந்து தப்புவதில்லை. வியட்நாமிலிருந்து வெண்மணிவரை இவர்கள் பார்வை படிந்திருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த சம்பவம். மறக்க முடியாத சம்பவம். தர்மகர்த்தா ஒருவர் தீபாவளிக்கு இலவசச் சேலை தருவதாக இருந்தார். அதற்கான அடையாள அட்டை வாங்க (சேலை கூட அல்ல) ஒர் உயர்நிலைப் பள்ளியில் கூட்டம் கூடியது.