பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா : 81 கூட்டம் மண்டியது. கூட்ட நெரிசலில் சிக்கி 19 நெசவாளப் பெண்களும் 2 குழந்தைகளும் உயிரிழந்தார்கள். மனதைப் பிழியும் இந்த மாபெரும் சோகத்திற்கு வாணியம்பாடி கல்லூரியில் பயின்ற மாணவர்கள் வரி வடிவம் கொடுத்தி ருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் - பா. செளந்தரராசன் இப்படித் தொடங்குகிறார். மதுரையிலே ஒரு மகாபாரதம் இந்த வரியில் ஒரு வினாடி ஒன்றி நிற்கிறோம். தொடர்கிறார்? மதுரையிலே ஒரு மகாபாரதம் புடவைகேட்ட பாஞ்சாலிகளின் உயிர்களை உரிந்தான் வறுமைக்கண்ணன் மதுரையிலே ஒரு மகாபாரதம் மீண்டும் தொடர்கிறார் சிந்திய பாஞ்சாலிகளின் குருதியில் நில துரியோதனன் தலையை முடித்தான், மதுரையிலே ஒரு மகாபாரதம் கலியுகத்திலே எல்லாம் தலைகீழாக நடக்குமென்பார்கள். மகாபாரதத்தையும் இப்படித் தலைகீழாக மாற்றிக் கலியுக தர்மத்தைக் காட்டி அதிர்ச்சியளிக்கப் புதுக்கவிஞர்களால் தான் முடியும். இதுபோன்ற மணிக்கவிதைகள் நிறைந்த அந்த வெளியீட்டிற்கு மாணவர்கள் வைத்துள்ள பெயர் 'இலவசத்திற்கு ஒரு விலை இதைத்தான் சொல்ல வேண்டும். இப்படித்தான் சொல்லவேண்டும் என்ற தயக்கம் புதுக்கவிஞர்களிடம் இல்லை. மரபுக்கவிஞர்கள் பிரசவ வேதனை என்றால், இவர்கள், கருக்கலையும் வேதனை என்பார்கள். கூந்தலில் ஏறிய பூக்களைச்சவங்கள் என்பார்கள். மனதின் அலைக்கழிப்புக்கு கேரம்போர்டில்