பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ எதிர்காலத் தமிழ்க்கவிதை : 82 சிவப்புக் காயைக் காட்டுவார்கள். கல்லறை என்றாலும் சன்னல் வைத்த கல்லறை கேட்பார்கள். இரவில் வரும் காதலியின் நினைவுகளைக் கொசுக்கடி என்பார்கள். மின்னலை இடிச்சொற்பொழிவின் சுருக்கெழுத்து என்பார்கள். அல்லது ககனப்பறவை நீட்டும் அலகு என்பார்கள். விடிவைப் பரிதி புணர்ந்து படரும் விந்து என்பார்கள், கடற்கரைச் சிலைகளைப் பறவைகளின் லெட்ரீன்கள் என்பார்கள். இப்படியெல்லாம் இவர்கள் சொல்வதால்தான் இவர்களின் குரலைப் புதுக்குரல் என்கிறோம்; இவர்களின் கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்கிறோம். புதுக்கவிதைகள் ஏறிச்சென்ற படிகளைப்போலவே இடறி விழுந்த பள்ளங்களையும் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அதன் முன்னேற்றம் நிச்சயமாகும். புதுக்கவிஞர்களைப் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று அவர்களின் சொற்காமம். வசந்த ருதுக்கள் தியாக தீபங்கள் அக்கினி வீணைகள் பூமியின் பிரளயங்கள் விசுவ ரூபங்கள் வியர்வை நதிகள் இருட்டின் ஆத்மாக்கள் ஆத்மாவின் ராகங்கள் தண்ணீரால் வெறுக்கப்பட்டதாகங்கள் என்ற சில வார்த்தைகளை வைத்து வாசகர்களைப் பிரமிப்படையச் செய்யலாம் என்ற பிரமை புதுக்கவிஞர் களை விட்டு விலகவேண்டும். வெறும் சப்தங்கள் எல்லாம் சங்கீதமாவதில்லை என்பதை உணரவேண்டும். இதுபோல மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட இலக்கியக் கோட்பாடுகளுக்காகவே expressionism,