பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 83 imagiism, surrealism, symbolism GLIrsi paip aspli பொருத்தமில்லாமல் புகுத்துவதற்காகவே புதுக்கவிதை, என்ற தப்பான எண்ணத்தையும் கைவிடவேண்டும். ஒரு முழம் மல்லிகைப்பூ கூந்தலில் இருந்தால் அழகு. கூடைப்பூவையும் தூக்கி வைத்து கூந்தல் தெரியாதபடி மறைத்தால் அது விகாரம். பூவா? நரையா? என்ற சந்தேகம் வராதா? கவிதை முழுவதுமே படிமமானால் அது கண்ணை உறுத்தும். இதயத்தைக் கவராது. மரபுக் கவிதைகள் பொருளை மூழ்கடிக்கும் எதுகை மோனை களைப்போல் புதுக்கவிதைகளில் படிமங்களும், மோனைகளைப்போல் புதுக்கவிதைகளில் படிமங்களும், குறியீடுகளும் கருத்தை நெரித்துவிடக் கூடாதல்லவா? Li母上D உருவகக் குறியீடு இடையீடில்லாத நிர்வாணக் கவித்வம் வேண்டி நீ எப்போது யாசிக்கப்போகிறாய்? என்ற கலாப்ரியாவின் விண்ணப்பம் புதுக்கவிதைக்கான ஒரு மீட்சி விண்ணப்பம்தான். வானம்பாடிகளின் வருகைக்குப் பிறகு புதுக்கவிதை மக்கள் மத்தியில் பரவியது, செல்வாக்குப் பெற்றது என்பது உண்மை. காரணம் அவர்களின் சமுதாய நோக்குத்தான். பரந்த உலகப்பார்வைதான். அதற்காக வானம்பாடிகளைப் பின்பற்றி எழுதும் கவிஞர்கள் எல்லோரும் சமுதாய நோக்குமட்டும் போதும் என்று கலையழகைப் புறக்கணிப்பதோ, எழுத்துப் பரம்பரைக் கவிஞர்கள்போல் செய்நேர்த்தியில் முதலிடம் கொடுத்துச் சமூகத்தை மறந்து அகஉளைச்சல்களில் கரைந்து விடுவதோ நல்லதாகத் தோன்றவில்லை.