பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* எதிர்காலத் தமிழ்க்கவிதை * 84 சமூகம் கெட்டுப்போய்விட்டதாடா சரி - சோடாப்புட்டி உடைக்கலாம் வாடா என்று சமத்காரமாகத் தப்பி ஓடுவதும் முறையல்ல. எதையும் வித்தியாசமாகச் சொல்வதென்பது வேறு. விகாரமாகச் சொல்வதென்பது வேறு. விகாரத்தையே மொத்த வடிவமாகக்கொண்ட புதுக்கவிதைகள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. சச்சிதானந்தனின் புதுச்சட்டை ஒரு கெட்ட உதாரணம். தட்சிணா மூர்த்தியின் 'திவ்வியதரிசனம் ஒரு ஆபாச தரிசனம். இத்தகைய குறைகளிலிருந்து மீண்டு புதுக்கவிதை இன்னும் மேலே மேல மேலே பறக்கவேண்டும். புதுக்கவிதை வசனத்தில் எழுதப்படுவது என்பதால் வசனத்தில் எழுதப்படும் சக இலக்கியத் துறைகளின் போக்குகளையும் ஆழங்களையும் உள்வாங்கிக் கொள்ளவேண்டும். நாடகம், சிறுகதை முதலியவற்றில் இடையிடையே புதுக்கவிதை பயன்படுத்தப்படுகிறது. இனி புதுக்கவிதையிலேயே நாடகங்களும், கதைகளும் வெளிவர வேண்டும். சிற்பியின் சாக்கடைகளும் தான் இன்னும் வற்றி விடவில்லை', 'சிகரங்கள் பொடியாகும் முதலியன அற்புதமான கதைக்கவிதைகள். இவரைப் போல் கதைக் கவிதைகளையும் தருமு சிவராம், கலாப்ரியா போல் குறுங்காவியங்களையும் சி. மணி போல் சோதனைக் கவிதைகளையும் படைக்கும் முயற்சிகள் பெருக வேண்டும். கா.நா.சு. தம் சுயசரிதத்தைக் கவிதையில் எழுதியுள்ளாராம். 15 காண்டங்களில் 1300 வரிகளில் எழுதியுள்ளாராம். இதன் சில பகுதிகளைக் கணையாழி பத்திரிகை வெளியிட்டது.