பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 85 பிற்பகுதிகளை வெளியிடாமல் விட்டுவிட்டது. இத்தகைய சோதனைகளுக்குப் பத்திரிகைகள் இடம் அளிக்கவேண்டும். புதுக்கவிதைகளுக்காகப் புற்றீசல் போல் சிற்றேடுகள் தோன்றித் தோன்றி மறைவது ஊக்கமளிக்கக் கூடியதல்ல; நின்றுவிட்ட 'எழுத்து', "வானம்பாடி போன்ற ஏடுகளை அல்லது அவற்றிற்கு நிகராகப் புதிதாய் ஓரிரு ஏடுகளைத் தொடங்கவேண்டும். தொடர்ந்து கொண்டு வரவேண்டும். இவையெல்லாம் கட்டளைகள் அல்ல; விண்ணப்பங்கள். விருப்பங்கள். புதுக்கவிதை இப்போது அமாவாசையின் இருட்டிலு மல்ல; பெளர்ணமியின் பிரகாசத்திலுமல்ல. நேற்று வானில் ஒர நகக்கோடாகத் தென்பட்டது இன்று இளம் பிறையாய் எழுகிறது. இவ்வளவு காலத்துக்குப் பிறகும் இவ்வளவுதானா வளர்ச்சி என்று அவநம்பிக்கை அடையவேண்டாம். இக்பாலின் குரலில் உள்ள நம்பிக்கையை ஏற்றி நிற்போம்: இளம்பிறையே உனது ஏழ்மையை நினைத்து வருந்தாதே! ஏனென்றால் உன்னுள்ளேதான் பூரணச்சந்திரன் புதைந்து கிடக்கிறான். ● هيه அகில இந்திய வானொலி திருச்சி 17-II-1977