பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யின்வந்து சேர்த்துப் பிடித்தான் மறைநாய்கள்
பொன் முடியை! மங்கை புலன் துடிக்க——
                                    அன்பில்லா
ஆட்கள் சிலர்வந்தார். புன்னை அடிமரத்தில்
போட்டிருக்கக் கட்டினார் பொன்முடியை!--நீட்டு

மிலாரெடுத்து வீசும் மறைநாய்கன் காலில்
நிலாமுகத்தை ஒற்றி,நிமிர்ந்து, —— கலாபமயில்

“அப்பா அடிக்காதீர்” என்றழுதாள். அவ்வமுதம்
ஒப்பாளைத், தள்ளி உதைக்கலுற்றான்—அப்போது

வந்து நின்ற தாயான வஞ்சிவடி வென்பாள்
சுந்தரியைத் தூக்கிப் புறம்போனாள் ;—சுந்தரியோ

அன்னையின் கைவிலக்கி, ஆணழகிடம் சேர்ந்தே,
“என்னை அடியுங்கள்” என்றுரைத்துச்——
                                     சின்னவிழி
முத்தாரம் பாய்ச்ச, உதட்டின் முனை நடுங்க,
வித்தார லோகம் விலவிலக்க——அத்தானின்
பொன்னுடம்பில் தன்னுடம்பைப் போர்த்த
                                     படியிருந்தாள்.
பின்னும் அவன்கோபம் பெரிதாகி——அன்னார்

இருவரையும் இன்னற் படுத்திப், பிரித்தே
ஒருவனைக் கட்டவிழ்த் தோட்டித்,——திருவனைய

செல்விதனை வீட்டிற் செலுத்தி, மறைநாய்கன்
இல்லத்துட் சென்றான். இவன் செயலை——
                                   வல்லிருளும்

கண்டு சிரித்ததுபோல், காலை அரும்பிற்று!
“வண்டு விழிநீர் வடித்தாளே!——அண்டையில்என்

19