பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

எந்நாளோ!


பாராது சென்ற பகல், இரவு, நாழிகையிள்
ஈராயிரத்தில் ஒன்றும் இல்லை எனும்படிக்குத்
தூங்கா திருக்கின்றேன். தொண்ணூறு நாள்
                                         கடந்தேன்.
தூங்குதல் எந்நாள்? துணைவரைக் காண்பதெந்
                                              நாள்?
கண்டவுடன் வாரி அணைத்துக் கண்ணாட்டி
                                          யென்று
புண்பட்ட தெஞ்சைப் புதுக்குவார் அப்பெருமான்
அன்பு நிலையம் அடையும் நாள் எந்தாளோ?
என்புருகிப் போகின்றேன்; ஈடேற்றம் எந்
                                       நாளோ?
கண்ணிற் கருவிழியும் கட்டவிழும் செவ்வுதடும்
விண்ணொளிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு,
தோனின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி,
ஆளன் திருவருளுக் காளாதல் எந்நாளோ?
என்ன செயக்கடவேன் என்னருமைக் காதலரை
இன்னே நான் அள்ளி எடுத்துச் சுவைப்பதற்கே?
ஊரின் வணிகர் உடன்போகக் காத்திருந்தேன்
யாரும் புறப்படவே இல்லை இது என்ன?

46