பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தாய் என் றழைத்தான், வஞ்சி
வடிவிளைக் கூவி, "அந்தோ,
இழந்தாய் நீ உனது பெண்ணை !"
என்றனன். வஞ்சி தானும்,
முழந்தாளிட் டழுது, பெண்ணின்
முடிமுதல் அடிவ ரைக்கும்
பழஞ்சீவன் உண்டா என்று
பதைப்புடன் தடவிப் பார்த்தாள்.

"அருமையாய்ப் பெற்றெடுத்த
ஆசைக்கோர் பெண்ணே!" என்றும்,
அருவிநீர் கண்ணீ ராக
அன்னையும் தந்தை யும், "பொற்
திருவிளக் கனையாய்!" என்றும்
செப்பியே, அந்தப் புன்னைப்
பெருமரப் பட்டை போலப்
பெண்ணினைப் பெயர்த்தெடுத்தார்!

கூடத்தில் கிடத்தி னார்கள்
கோதையை ! அவள் முகத்தில்
மூடிய விழியை நோக்கி
மொய்த்திருந் தார்கள். அன்னாள்
வாடிய முகத்தில், கொஞ்சம்
வடிவேறி வகுதல் கண்டார்.
ஆடிற்று வாயிதழ் தாள்!
அசைத்தன கண்ணி மைகள் !

49

4-355