பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


பறந்தது கிள்ளை


விடியுமுன் வணிகர் பல்லோர் பொதிமாட்டை விரைந்தே ஓட்டி

நடந்தனர் தெருவில் ! காதில் கேட்டனள் நங்கை, நெஞ்சு

திடங்கொண்டாள், வேண்டும் சில ஆடை, பணம், எடுத்துத்

தொடர்ந்தனள் அழகு மேனி தோன்றாமல் மூக்கா டிட்டே !

வடநாடு செல்லும் முத்து வணிகரும் காணா வண்ணம்

கடுகவே நடந்தாள், ஐந்து காதமும் கடந்த பின்னர்,

நடைமுறை வரலா றெல்லாம் நங்கையாள் வணிக ருக்குத்

தடையின்றிக் கூ கூற லானாள்'

தயைகொண்டார் வணிகர் யாரும்

51