பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

ஜீவமுத்தம்

வடக்கினின்று பொன்முடியும் பிறரும் வந்தார்;
வணிகருடன் பூங்கோதை தெற்கி னின்று
வடதிசைநோக் கிச்சென்றான்; நெருங்கலானார்!
வளர்புதர்கள், உயர்மரங்கள் நிறைந்த பூமி!
நடைப்பாதை ஒற்றையடிப்பாதை! அங்கே
நாலைந்து மாடுகளும் தமிழர் தாமும்
வடக்கினின்று வருங்காட்சி மங்கை கண்டாள்!
வணிகர்களும் கண்டார்கள் வெகுதூ ரத்தில்!
பொன் மூடியும் எதிர்கண்டான் ஒரு கூட்டத்தைப்

புலைத் தொழிலும் கொலைத்தொழிலும்
                                    [புரிவோராண
வன்மனத்துப் பாவிகளோ என்று பார்த்தான்!
வாய்மையுறு தமிழரெனத் தெரிந்துகொண்டான்
தன்நடையை முடுக்கினான். எதிரில், மங்கை
தனர் நடையும் உயிர்பெற்றுத்தாவிற்! றங்கே
"என்னஇது! என்னஇது!" என்றே அன்னோன்
இருவிழியால் எதிரினிலே உற்றுப் பார்த்தான்.

59