பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக், குணமொரு மூன்றும்
திருந்து சாத்துவிகமே யாக.
இந்துவாழ் துடையான் ஆடு மானந்த
எல்லையில், தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் தினைத்து,
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்;

ஆகுமித் திரு விருத்த
அனுபவப் பயனைக் கேட்க,
ஈகுவோன் கையி லொன்றும்
இல்லாமை போல் தவித்துத்,
தேகமும் நடுங்கி நின்று
திருவடி சரணம் என்றான்.
ஏகிப்பிள் வருக என்றோம்;
சிதம்பரம் ஏகி உள்ளான்.

சென்றஅக் குருபரன் தான்
திரும்பி வந்திடு மோர் நாளும்
இன்றுதான், சிறிது நேரம்
இருந்திடில் காணக் கூடும்"
என்றுதற் றேசிகர் தாம்
இருநாய்கள் மாருங் கேட்க
நன்றுற மொழிந்தார், கேட்ட
நாய்கன்மார் காத் திருந்தார்.

73