பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

சு. சமுத்திரம் ☐

டி.வி.யில் மலரும் நினைவுகள் வருவது போல, என்னை, பொங்கல், தீபாவளி மலர்களுக்கு மட்டுமே, எழுதச் சொல்வது என்று தீர்மானித்து விட்டன. ஏதாவது ஒரு பத்திரிகை ஒரு கதை கேட்டாலோ, என்னால் உடனடியாக எழுத முடியவில்லை. அதுவும் ஒருகாலத்தில் மூன்று மணி நேரத்தில் ஒரு சிறுகதையை முடித்த எனக்கு, மூன்று நாட்களில்கூட முடிக்க முடியவில்லை. அலுவலக வேலைப்பளுவாலும், நமது ‘சீசன்’ முடிந்துவிட்டது என்ற எண்ணத்தாலும், நானும் அதிகமாகக் கவலைப்படவில்லை.

தோழியரே! தோழியரே!

இந்தப் பின்னணியில், ஓரிரு மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் உள்ள எனது கிராமத்திற்குப் போயிருந்தேன். நான், ஒரு காலத்தில் மனதுக்குள்ளாவது ரசித்த பெண்களில் பலர் பேத்திகள்கூட எடுத்துவிட்டார்கள். என்னுடைய தோழர் ஒருவர், ஊராட்சி ஒன்றியத் தலைவராகி, சதா அரசியலைப் பற்றியே புலம்பினார். அப்போதைய தோழர்கள், இப்போதைய குடும்பத் தலைவர்களாகி, தெருவாசிகளுக்கும் உதவாத சிறியவர்களாகிவிட்டார்கள். இளைய தலைமுறையோ பரிச்சயமற்றது. ஆனாலும் நானே இளைய தலைமுறையினரிடம் வலியப் பேசினேன். சிலர் “எங்கள வச்சிக் கதை எழுதவா” என்று சொல்லி நழுவினார்கள். சிலர் நம்ம ஊரைக் கேவலப்படுத்துகிறீர்களே என்றார்கள். நான் அவர்களுக்கு நம்முடைய பண்பாட்டில் நாம் பெருமைப்பட வேண்டும் என்று லெக்சர் அடித்தேன். சிலர் சிரித்தார்கள்; சிலர் ரசித்தார்கள். ஊரிலிருந்து திரும்பும்போது, “ஒரு